Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தி.மு.க., வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

தி.மு.க., வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

தி.மு.க., வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

தி.மு.க., வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

ADDED : செப் 28, 2011 11:35 PM


Google News

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.க., வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

தெற்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தி.மு.க., நிர்வாகிளுடன் இன்று (செப்.,29) அந்தந்த பகுதியில் உள்ள பெரியார், அண்ணாதுரை, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், மாவட்ட கவுன்சிகலர் வேட்பாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திலும், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினருக்கு போட்டியிடுவோர் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், டவுன் பஞ்சாயத்து தலைவர் மற்றும் டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். தர்மபுரி நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் கந்தசாமி இன்று காலை 10 மணிக்கு தர்மபுரி நான்கு ரோடு அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மாவட்ட பொறுப்பாளர் முல்லைவேந்தன் தலைமையில் ஊர்வலமாக சென்று தர்மபுரி நகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us