Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி பிரச்சாரம் முடிந்து சென்னை திரும்பினார் ஜெ.,

திருச்சி பிரச்சாரம் முடிந்து சென்னை திரும்பினார் ஜெ.,

திருச்சி பிரச்சாரம் முடிந்து சென்னை திரும்பினார் ஜெ.,

திருச்சி பிரச்சாரம் முடிந்து சென்னை திரும்பினார் ஜெ.,

ADDED : அக் 10, 2011 02:52 AM


Google News
திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா, திருச்சியில் நேற்று மாலை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித்தேர்தல் பிரச்சாரப்பயணத்தை துவக்கி, நேற்றிரவே முடித்து, சென்னை திரும்பினார்.திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி, மேயர் வேட்பாளர் ஜெயா மற்றும் தொகுதியில் உள்ள கவுன்சிலர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் முன், மாலை 6.15 மணியளவில் பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து, புத்தூர் நால்ரோடு, உறையூர் நாச்சியார்கோவில், தென்னூர் மந்தை, பீமநகர், கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.இறுதியாக 9.05 மணிக்கு, எடமலைப்பட்டிபுதூரின் தனது பிரச்சாரத்தை நிறைவுச் செய்தார். அங்கிருந்து நேரடியாக திருச்சி விமானநிலையம் சென்ற ஜெயலலிதா, இரவு 9.45 மணிக்கு தனிவிமானம் மூலம் சென்னை கிளம்பினார்.

*அமைச்சர்கள் நத்தம்விஸ்வநாதன், சுப்ரமணியன், உதயகுமார், மாநில தேர்தல் பிரிவுச்செயலாளரும், எம்.எல்.ஏ.,யுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வார்டு பகுதிகளில் பெரும்திரளாக மக்கள் திரண்டிருந்தனர்.*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சார்பில், ஜெயலலிதாவுக்கு பிரச்சாரம் முடித்த எடமலைப்பட்டிபுதூரில், ஆண்டாள் மாலை, படத்துடன் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.*காஜாமலை துவங்கி எடமலைப்பட்டி புதூர் பிரிவுச்சாலை வரை பைபாஸ் சாலையில் இரவை பகலாக்கும் வகையில் நூற்றுக்கணக்கான டியூப் லைட்டுகள், போகஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.*ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின்போது, தமிழக உளவுத்துறை டி.ஐ.ஜி-1 பொன் மாணிக்கவேல், டி.எஸ்.பி., சாமிநாதன், தனிகாரில் பின்தொடர்ந்து வந்தனர். வழக்கமாக பத்திரிகையாளர்களை கண்டால், வண்டியை விட்டு இறக்கும் பொன்மாணிக்கவேல், கடைசிவரை காரை விட்டு இறங்கவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us