/உள்ளூர் செய்திகள்/மதுரை/டாக்டர் வெங்கிடசாமி நினைவு மண்டபம் திறப்புடாக்டர் வெங்கிடசாமி நினைவு மண்டபம் திறப்பு
டாக்டர் வெங்கிடசாமி நினைவு மண்டபம் திறப்பு
டாக்டர் வெங்கிடசாமி நினைவு மண்டபம் திறப்பு
டாக்டர் வெங்கிடசாமி நினைவு மண்டபம் திறப்பு
ADDED : அக் 03, 2011 01:00 AM
மதுரை : மதுரை சிவகங்கை ரோடு அரவிந்த் கண் ஆஸ்பத்திரி ஆரோ லேப் கட்டட வளாகத்தில், டாக்டர் வெங்கடசாமி நினைவு மண்டபம் திறப்பு விழா நேற்று நடந்தது.
கோவல் டிரஸ்ட் தலைவர் ஜி.சீனிவாசன் தலைமை வகித்தார்.
ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். உலக சுகாதார அமைப்பு ஆலோசகர் பராராஜசேகரம், மண்டபத்தை திறந்து வைத்து பேசினார். இதில் தியான கூடம், நூலகம், மினி கருத்தரங்கு கூடம், கலையரங்கம் போன்ற வசதிகள் உள்ளன.
டாக்டர் நாச்சியார்குத்துவிளக்கேற்றினார். டாக்டர் டில்ஸ்டூவர்ட், தொழிலதிபர் பி.ஆர். பழனிச்சாமி, வேலம்மாள் பள்ளி தாளாளர் முத்துராமலிங்கம், ஜெயவிலாஸ் நிர்வாகி தினகரன், ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா, தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு, மகாத்மா பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், அப்போலோ ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் ரோகிணிஸ்ரீதர் பங்கேற்றனர்.


