Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மதுபாட்டிலில் குட்டி எலி"குடி'மகன்கள் அதிர்ச்சி

மதுபாட்டிலில் குட்டி எலி"குடி'மகன்கள் அதிர்ச்சி

மதுபாட்டிலில் குட்டி எலி"குடி'மகன்கள் அதிர்ச்சி

மதுபாட்டிலில் குட்டி எலி"குடி'மகன்கள் அதிர்ச்சி

ADDED : அக் 02, 2011 12:43 AM


Google News
ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வாங்கிய பிராந்தியில், குட்டி எலி எலும்புக்கூடாக கிடந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மாநிலம் முழுவதும் 252 டாஸ்மாக் கடைகளும், ஈரோடு மாவட்டத்தில் 252 டாஸ்மாக் கடைகளும் இயங்கி வருகிறது. ஈரோடு முத்தம்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று குடிமகன்கள் சிலர், 'ஓல்டு சீக்ரெட்' பிராந்தி குவார்ட்டர் வாங்கினார். அப்போது, சீல் உடைக்காத பாட்டிலுக்குள் கருப்பாக ஒரு பொருள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பாட்டிலை தொடர்ந்து கூர்ந்து கவனித்த போது, பாட்டிலுக்குள் கிடப்பது எலும்புக்கூடான குட்டி எலி என்பது தெரியவந்தது. இதனால் குடிமகன்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குடிமகன்கள் சிலர் கூறுகையில்,''ஈரோட்டில் வரும் சரக்குகளில் தொடர்ந்து, கரப்பான் பூச்சி, எலிக்குட்டி, தூசி, குப்பைகள் என மிதப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே, கடை ஊழியர்களிடமும், கடை மேலாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us