/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கவுன்சிலிங்கில் சி.இ.ஓ., தலையீடு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டுகவுன்சிலிங்கில் சி.இ.ஓ., தலையீடு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
கவுன்சிலிங்கில் சி.இ.ஓ., தலையீடு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
கவுன்சிலிங்கில் சி.இ.ஓ., தலையீடு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
கவுன்சிலிங்கில் சி.இ.ஓ., தலையீடு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு
ADDED : செப் 24, 2011 09:59 PM
சிவகங்கை : ''கவுன்சிலிங்கில் முதன்மை கல்வி அலுவலர் தலையீட்டால் சிவகங்கை ஒன்றிய ஆசிரியர் மாறுதலில் நடந்த முறையற்ற மாறுதலை ரத்து செய்யவேண்டும்,'' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
கூட்டணி புரவலர் பொன்ராஜ், மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர் கூறியதாவது: தொடக்க கல்வி துறையில் ஒன்றியத்திற்குள் அந்தந்த நிலைகளில், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் நடத்த வேண்டும். அதே நேரம் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலினால், ஏற்படும் காலிப்பணியிடத்தை மீண்டும் ஒரு மாறுதல் செய்து நிரப்ப கூடாது. இந்த நடைமுறையை மாற்றி, சிவகங்கை ஒன்றியத்தில், பொன்குண்டுப்பட்டி பள்ளியில் இருந்து செம்பூர் காலனி பள்ளிக்கு மாறுதல் வாங்கிய ஆசிரியைக்கு , மீண்டும் கீழக்கண்டனி பள்ளிக்கு விதிகளுக்கு புறம்பாக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முதன்மை கல்வி அலுவலரின் தலையீட்டால் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்த மாறுதலை ரத்து செய்யவேண்டும் என்றனர்.


