/உள்ளூர் செய்திகள்/மதுரை/அடுத்தவர் இடத்தை வாடகைக்கு விட்ட தி.மு.க., செயலாளர் கைதுஅடுத்தவர் இடத்தை வாடகைக்கு விட்ட தி.மு.க., செயலாளர் கைது
அடுத்தவர் இடத்தை வாடகைக்கு விட்ட தி.மு.க., செயலாளர் கைது
அடுத்தவர் இடத்தை வாடகைக்கு விட்ட தி.மு.க., செயலாளர் கைது
அடுத்தவர் இடத்தை வாடகைக்கு விட்ட தி.மு.க., செயலாளர் கைது
ADDED : செப் 22, 2011 12:30 AM
மதுரை : மதுரையில் எல்.ஐ.சி., ஏஜென்ட் வீட்டை அபகரித்து, ரேஷன் கடைக்கு வாடகைக்கு விட்டதாக மாநகராட்சி 52வது வார்டு தி.மு.க., செயலாளர் காசிவிஸ்வநாதன், 47, கைது செய்யப்பட்டார்.மதுரை கீழப்பெருமாள்மேஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் பிரசாத், 60.
எல்.ஐ.சி., ஏஜென்ட்டான இவருக்கு, அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியில் சொந்த வீடு உள்ளது. இங்கு குடியிருந்த தி.மு.க., செயலாளர் காசிவிஸ்வநாதன், வாடகை கொடுக்காமல், வீடு தனக்குதான் சொந்தம் என்று போலி ஆவணம் தயாரித்து ரேஷன் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து கேட்ட பிரசாத்திற்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.மத்திய குற்றப்பிரிவில் பிரசாத் புகார் செய்தார். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420(மோசடி), 387(காயம், மரணம் ஏற்படும் என மிரட்டுதல்), 465(பொய்யான ஆவணம் தயாரித்தல்), 468(ஏமாற்றும் நோக்கில் ஆவணம் தயாரித்தல்), 471(பொய் ஆவணத்தை உண்மை என கூறுதல்), 506/2 (கொலை மிரட்டல்) உட்பட 8 பிரிவுகளின் கீழ் காசிவிஸ்வநாதனை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், எஸ்.ஐ., வெங்கடேஷ் கைது செய்தனர்.