Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தொடர் மழையால் சூடுபிடித்தது விவசாயம்

தொடர் மழையால் சூடுபிடித்தது விவசாயம்

தொடர் மழையால் சூடுபிடித்தது விவசாயம்

தொடர் மழையால் சூடுபிடித்தது விவசாயம்

ADDED : செப் 22, 2011 12:30 AM


Google News

பேரம்பாக்கம் : திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், விவசாய வேலையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம், மப்பேடு, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, வெள்ளவேடு உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயம் சூடுபிடித்துள்ளது. சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால், மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து, முடங்கிக் கிடந்த பயிர்த் தொழிலை தொடங்கினர். கடந்த மாதம் நிலத்தை உழுது, நெல் விதை விதைத்தனர். அனைத்து விவசாயிகளும் தற்போது தங்கள் நிலங்களை உழுது, நாற்று நடவும், வேர்க்கடலை விதைக்கவும் ஆரம்பித்துள்ளனர். ஆனால் போதுமான கூலியாட்கள் இல்லாததால், குறித்த நேரத்தில் பயிர் வேலைகள் செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். இதனால், விவசாயிகள் நாற்று நட கூலியாக ஒருவருக்கு, 200 ரூபாய், ஏர் உழ ஒருவருக்கு 300 ரூபாய் என, கடந்த ஆண்டை விட அதிகமாக கொடுத்து, ஒரு வாரம் முன்னதாக ஆட்களை அமர்த்தி வருகின்றனர். சிலர் கிராமங்களில் இருந்து கூலியாட்களை, டிராக்டர் மூலம் கொண்டு வந்து, விவசாய வேலைகளை செய்கின்றனர். மேலும் நாற்று நடுதல், களை எடுத்தல் போன்ற பணிகளுக்கு வரும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு, மதிய உணவையும், விவசாயிகள் வாங்கி தருகின்றனர். இவ்வாறு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விவசாயம் செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us