/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அ.தி.மு.க., கவுன்சிலர் கடைக்கு தீ வைப்புஅ.தி.மு.க., கவுன்சிலர் கடைக்கு தீ வைப்பு
அ.தி.மு.க., கவுன்சிலர் கடைக்கு தீ வைப்பு
அ.தி.மு.க., கவுன்சிலர் கடைக்கு தீ வைப்பு
அ.தி.மு.க., கவுன்சிலர் கடைக்கு தீ வைப்பு
ADDED : செப் 21, 2011 11:22 PM
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் ஹைதர் அலியின் கடைக்கு தீ வைக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.தொண்டி அருகே எஸ்.பி.
பட்டினம் அ.தி.மு.க., கிளை செயலாளர் யூசுப், சில நாட்களுக்கு முன் கொலை செய்யபட்டார். அதே கிராமத்தை சேர்ந்த காங்., உறுப்பினர் நாகூர்கனி உட்பட ஆறு பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் மூவர் கைது செய்யபட்டனர். இருவர் கோர்ட்டில் சரணடைந்தனர். நாகூர்கனி மட்டும் தலைமறைவாக உள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலரான ஹைதர் அலியின் பேன்சி கடைக்கு ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு தீ வைத்தது. நாகூர்கனி ஆதரவாளர்கள் தீ வைத்ததால் 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரொக்கம் தீக்கிரையானதாக ஹைதர்அலி புகார் கொடுத்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.