Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழறிஞருக்கு விருது

தமிழறிஞருக்கு விருது

தமிழறிஞருக்கு விருது

தமிழறிஞருக்கு விருது

ADDED : செப் 20, 2011 06:29 PM


Google News

கோவை: நன்னெறிக் கழகம் சார்பில் 'தமிழ்நெறிச் செம்மல்' விருது வழங்கும் விழா நடந்தது.

கோவை நன்னெறிக் கழகம் சிறந்த தமிழ் பணியாற்றிய தமிழறிஞரை தேர்வு செய்து ஆண்டு தோறும், 'தமிழ்நெறிச் செம்மல்' விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர் குருசாமிக்கு வழங்கப்பட்டது. நன்னெறிக் கழக தலைவர் குப்புசாமி வரவேற்றார். தலைமை வகித்து பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி பேசியதாவது:

இவ்விருதை பெறும் பேராசிரியர் குருசாமி சிறந்த கல்வியாளர் மட்டுமல்ல, சிறந்த காந்திய சிந்தனையாளராகவும் இருந்து, சேவை செய்து வருபவர். தமிழில் பல நல்ல நூல்களை எழுதி, தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். இவ்வாறு பேராசிரியர் குருசாமி பேசினார். நன்னெறிக் கழக செயலாளர் ஸ்ரீராமன், பொருளாளர் ஜெயசந்திரன், கவிஞர் கவிதாசன், பேராசிரியர் இருசுப்பிள்ளை ஆகியோர் பேசினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us