/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வாக்காளர் பட்டியல் தாமதம் தேர்தல் அறிவிப்பில் சிக்கல்வாக்காளர் பட்டியல் தாமதம் தேர்தல் அறிவிப்பில் சிக்கல்
வாக்காளர் பட்டியல் தாமதம் தேர்தல் அறிவிப்பில் சிக்கல்
வாக்காளர் பட்டியல் தாமதம் தேர்தல் அறிவிப்பில் சிக்கல்
வாக்காளர் பட்டியல் தாமதம் தேர்தல் அறிவிப்பில் சிக்கல்
ADDED : செப் 19, 2011 10:30 PM
திண்டுக்கல் : வாக்களர்பட்டியல் வெளியிடுவதில் பல மாவட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்காளர் பட்டியலே உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இருந்தபோதும், சட்டசபை தொகுதி பட்டியலில் இருந்து நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியகவுன்சிலர், ஊராட்சிகள், வார்டுகள் என தனித்தனியே வாக்காளர் பட்டியலை பிரிக்கும் பணி நடந்தது.இதையடுத்து செப்., 15 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.பணிகள் முடிய தாமதம் ஏற்பட்டதால் செப்., 15 ல் வாக்காளர் பட்டியல் வெளியிடமுடியவில்லை. இதையடுத்து செப்., 19 ல் பட்டியல் வெளியிடப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வாக்காளர் பட்டியலை ஆன்லைன் மூலம் பெற ஒரே சமயத்தில் பெற முயற்சித்ததால், பல மாவட்டங்களில் முழுமையாக பட்டியலை பெற முடியவில்லை. இதனால் அறிவிக்கப்பட்டபடி திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. ஆன்லைனில் வாக்காளர் பட்டியல் பெற்று, பின் பிரிண்ட் செய்து வெளியிடுவதில் மேலும் தாமதமாகும் நிலை உள்ளது.வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னரே தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்பதால் தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.