/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை: அமைச்சர் பேச்சுஇடைநிற்றலைக் குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை: அமைச்சர் பேச்சு
இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை: அமைச்சர் பேச்சு
இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை: அமைச்சர் பேச்சு
இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை: அமைச்சர் பேச்சு
ADDED : செப் 18, 2011 01:07 AM
ராசிபுரம்: ''மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றலை குறைக்கும் வகையில், அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது,'' என, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
ராசிபுரம், அத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியருக்கு, லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். 45 பள்ளி மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கி, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பள்ளி மாணவ, மாணவியரின் கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் வகையில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. மேல்நிலைக் கல்வியில், இடைநிற்றலை குறைக்கும் வகையில், அரசு சார்பில், கல்வி உதவித்தொகையாக எஸ்.எஸ்.எல்.ஸி., பயிலும் மாணவ, மாணவியருக்கு, 1,500 ரூபாய், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பயில்வோருக்கு அரசு சார்பில், 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களை பின்பற்றி, மற்ற மாநிலங்களிலும் இத்திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஏழ்மையான குடும்பங்களுக்கு நான்கு ஆடுகள் வழங்கப்படுகிறது. அனைத்து வகையிலும் மக்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில், அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, அரசுப்பாளையம் கிராமத்தில், 23 நபர்களுக்கு தலா நான்கு ஆடுகள் வீதம் அமைச்சர் தங்கமணி வழங்கினார். சட்டசபை துணை சபாநாயகர் துரைசாமி, நாமக்கல் ஆர்.டி.ஓ., டாக்டர் வினய், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் சண்முகபாரதி, உதவி இயக்குனர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


