/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விளாத்திகுளம் கோயிலில் அன்னதான திட்டம் துவக்க விழாவிளாத்திகுளம் கோயிலில் அன்னதான திட்டம் துவக்க விழா
விளாத்திகுளம் கோயிலில் அன்னதான திட்டம் துவக்க விழா
விளாத்திகுளம் கோயிலில் அன்னதான திட்டம் துவக்க விழா
விளாத்திகுளம் கோயிலில் அன்னதான திட்டம் துவக்க விழா
ADDED : செப் 17, 2011 02:14 AM
விளாத்திகுளம் : விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு எம்எல்ஏ.,மார்க்கண்டேயன் தலைமை வகித்து அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார். கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்றை உதவி ஆணையர் வீரராஜன், டவுன் பஞ்.,தலைவி புவனேஸ்வரி, கோவில்பட்டி தொழிலதிபர் காளிராஜன், அதிமுக.,ஒன்றிய செயலாளர்கள் ரூபம்வேலவன், ஞானகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கடற்கரைவேல், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், திருப்பணிக் குழுவைச் சேர்ந்த இளையராஜா, வர்த்தக கழக செயலாளர் சக்திவேல், குட்லக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் செய்தனர்.