Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை

ADDED : செப் 16, 2011 12:13 AM


Google News

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கரூர் கலெக்டர் ÷ஷாபனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற நபர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளை மணக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் திருமண நிதியுதவித்தொகையாக 12 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கமாகவும், 12.500 ரூபாய்க்கான என்.எஸ்.சி., பத்திரமாகவும் மொத்தம் 25 ஆயிரம் ரூபாயும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ( 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், 25 ஆயிரம் ரூபாய் என்.எஸ்.சி., பத்திரமாகவும் வழங்கப்படும். மேலும், மணப்பெண்ணுக்கு திருமாங்கல்யம் செய்ய நான்கு கிராமம் தங்கம் வழங்கப்படும். இத்திட்டத்தில், பெண்ணுக்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு கிடையாது. முதல் திருமணமாக இருக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். திருமணத்துக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த திட்டத்திலும் திருமண உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், (அறை எண் 007), தாந்தோன்றிமலை, கரூர்-7 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us