ADDED : செப் 14, 2011 01:36 AM
கோவை:செலக்கரிச்சல், மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேக முதலாமாண்டு விழா,
இன்று நடக்கிறது.சூலூர், செலக்கரிச்சல் அருகில் உள்ள
திம்மநாயக்கன்பாளையத்தில் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் கோவில்
அமைந்துள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடத்தப்பட்டது; ஓராண்டு
நிறைவடைந்ததையடுத்து முதலாமாண்டு விழா இன்று நடக்கிறது.இன்று காலை 8.30
மணிக்கு விநாயகர் வழிபாடு, ஞானப் பெருவேள்வி நடக்கிறது. காலை 10.30 மணிக்கு
அமுத நீராட்டும், மதியம் 12.00 மணிக்கு அலங்கார பூஜை, பேரொளி வழிபாடும்
நடக்கின்றன. மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 6.00 மணிக்கு சுவாமி
வீதியுலாவும் நடக்கின்றன.


