நேரு குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளுக்குபஸ்களை இயக்கியதில் ரூ.32 லட்சம் இழப்பு
நேரு குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளுக்குபஸ்களை இயக்கியதில் ரூ.32 லட்சம் இழப்பு
நேரு குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகளுக்குபஸ்களை இயக்கியதில் ரூ.32 லட்சம் இழப்பு
சென்னை:''கடந்த தி.மு.க., ஆட்சியில் நேரு, தனது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் வசிக்கும் பகுதிக்கு பஸ்களை இயக்கியதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
சட்டசபையில் நேற்று போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:பாலபாரதி-மார்க்சிஸ்ட்: கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியினர் டாடா மேஜிக், ஷேர் ஆட்டோக்களுக்கு டூரிஸ்ட் பெர்மிட் பெற்றுக் கொண்டு நகரத்தில் ஓட்டி வந்தனர். அந்த வாகனங்களின் பின்னால் தளபதி என எழுதி வைத்திருந்தனர். தற்போது அதை அழித்து விட்டு ஓட்டி வருகின்றனர்.இதனால், ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை பற்றி தெரிவித்தேன். பஸ் கட்டணம் உயர்த்தவில்லை என நேரு தெரிவித்தார். ஆனால், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது அவர் கட்டணம் இல்லாத வேனில் பயணம் செய்துக் கொண்டிருக்கிறார். (முதல்வர் உட்பட உறுப்பினர்கள் சிரித்தனர்.)
அமைச்சர் செந்தில்பாலாஜி: கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியினர் தங்களது பினாமிகள் பெயரில் ஒருவர் 20, 30 டாடா மேஜிக், ஷேர் ஆட்டோக்களை வாங்கி, தொழிலாளர்கள் உழைப்பை உறிஞ்சுக் கொண்டிருந்த நிலைமை இருந்தது. திண்டுக்கல் நகரத்தில் டாடா மேஜிக், ஷேர் ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் போரட்டம் நடத்திய போது, போக்குவரத்து துறைக்கு கூடுதலாக 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
திண்டுக்கல் மட்டுமல்ல, டாடா மேஜிக், ஷேர் ஆட்டோக்கள் உரிய வழித்தடங்களில் ஓட்டாமல், வழித்தடங்களை மாற்றி ஓட்டுபவர்கள் மீதும், பொதுமக்களுக்கு இடையூறு அளித்து ஓட்டுபவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி: கடந்த தி.மு.க., ஆட்சியில் தான் நெடுஞ்சாலையில் போலீசார் முகம் சுளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும். மனித உயிர்களை காக்க வேண்டும் என்பதற்காக குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது தான் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கலையரசன்-பா.ம.க.,: குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செந்தில் பாலாஜி: குடித்து விட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது மட்டுமல்ல, கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது தான் விபத்துகளை தடுக்க முடியும்.
அஸ்லாம் பாஷா-மனிதநேய மக்கள் கட்சி: தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் தங்களது உறவினர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பஸ்களை இயக்கினர். அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
அமைச்சர் செந்தில்பாலாஜி:கடந்த ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த நேரு, தனது உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பஸ்களை இயக்கியதால், பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. இதனால் 32 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் நஷ்டத்தில் இயங்கியுள்ளன. ஒரு இடத்தில் புதிய பஸ்களை இயக்குவதாக கொடி அசைத்து, போட்டோ எடுத்து விடுவர். ஆனால், மூன்று மாதம் அல்லது ஆறு மாதம் கழித்து அதே பஸ்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று புதிய பஸ்களை விடுவது போல மக்களை ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.