மதுரை : மதுரை செந்தாமரை கல்லூரி வணிகவியல் மற்றும் தொழில் மேலாண்மை துறை சார்பில் 'ஊக்கமளித்தலும், உடல்மொழியும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் செந்தூர்பாண்டி தலைமை வகித்தார். குறிஞ்சி பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஆனந்தராஜ் பேசுகையில்,''உடல்மொழி வாயிலாக செய்திகளை வெளிப்படுத்துவதுடன், மற்றவர்களின் நிலையை புரிந்து கொள்ளலாம், என்றார்.


