/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/இனோவா காரில் எரிசாராயம் கடத்தல் ஊராட்சி தலைவி கணவர் உட்பட ஐந்து பேர் கைதுஇனோவா காரில் எரிசாராயம் கடத்தல் ஊராட்சி தலைவி கணவர் உட்பட ஐந்து பேர் கைது
இனோவா காரில் எரிசாராயம் கடத்தல் ஊராட்சி தலைவி கணவர் உட்பட ஐந்து பேர் கைது
இனோவா காரில் எரிசாராயம் கடத்தல் ஊராட்சி தலைவி கணவர் உட்பட ஐந்து பேர் கைது
இனோவா காரில் எரிசாராயம் கடத்தல் ஊராட்சி தலைவி கணவர் உட்பட ஐந்து பேர் கைது
ADDED : செப் 08, 2011 12:06 AM
மாமல்லபுரம் : கல்பாக்கம் அருகே, காரில் எரிச்சாராயம் கடத்திய, ஊராட்சி தலைவியின் கணவர் உட்பட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.கல்பாக்கம் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில், இரண்டு கார்களில், எரிசாராயம் கடத்தப்படுவதாக, எஸ்.பி., மனோகரனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவை அடுத்து, திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சதுரங்கப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார், நேற்று காலை 4 மணிக்கு, வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, அவ்வழியே வந்த இனோவா காரை நிறுத்தி, சோதனை செய்த போது, அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, நான்கு கேன்களில் எரிசாராயம் இருந்தது தெரிந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர்.காரில் வந்த மதுராந்தகம் அடுத்த மொரப்பாக்கம் ஊராட்சி தலைவர் மஞ்சுளாவின் கணவர் சங்கர், 40, அவரது மைத்துனர் சுந்தர், 30, திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூரை சேர்ந்த, பிச்சாண்டி மகன் ராஜேந்திரன், 33, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில், கல்பாக்கம் அடுத்த நல்லூர் மேற்கு காலனிக்கு, மற்றொரு காரில் எரிச்சாராயம் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஜோதி, 50, என்ற பெண்ணின் வீட்டருகே, மாருதி காரிலிருந்த மூன்று எரிச்சாராய கேன்களை, ஜோதியும், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த வேதாசலம் மகன் சத்யா, 27, என்பவரும் இறக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.