சக்சேனா உதவியாளர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்'
சக்சேனா உதவியாளர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்'
சக்சேனா உதவியாளர் ஜாமின் மனு "டிஸ்மிஸ்'
ADDED : செப் 05, 2011 11:49 PM
கோவை:பேப்பர் மில் அபகரிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் உதவியாளர் ஐயப்பனின் ஜாமின் மனு, நேற்று மாவட்ட கோர்ட்டில் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.உடுமலையைச் சேர்ந்தவர் சீனிவாசன்; தொழிலதிபர்.
இவருக்குச் சொந்தமான பேப்பர் மில் கருமத்தம்பட்டியில் உள்ளது. போலி ஆவணம் மூலம், இந்த மில்லை அபகரித்து விட்டதாக, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் விசாரித்து, சென்னை-சேப்பாக்கம் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், சன்பிக்சர்ஸ் சக்சேனா, உதவியாளர் ஐயப்பன் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், ஐகோர்ட் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சக்சேனா, உதவியாளர் ஐயப்பன் ஆகியோர், உடுமலை கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, உதவியாளர் ஐயப்பன் சார்பில் ஜாமின் கேட்டு, மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு விசாரணைக்கு வந்தது.மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்து, ஜாமின் மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.