ADDED : செப் 02, 2011 11:06 PM
உடுமலை : குண்டலப்பட்டி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இவ்விழாவையொட்டி, விநாயகர் வழிபாடு, முதற்கால யாக வேள்வி, 108 திரவிய வேள்வி, மங்கள ஆராதனை, எண்வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்றுமுன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, பரிவார மூர்த்தி ஆலயத்துள் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், காலை 11.15 மணிக்கு கும்பாபிஷேக விழா, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, பத்து விதத் தரிசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவை காமாட்சிபுரி ஆதினம் அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் மகா சமஸ்தானம் குருமகா சன்னிதானங்கள் சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பின், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, வாண வேடிக்கை, குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.
உடுமலை: சின்ன பொம்மன் சாலை ராமலிங்க சவுண்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 8ம் தேதி நடைபெறுகிறது. வரும் 6ம் தேதி மாலை 5.00 மணிக்கு முளைப்பாரி கொண்டு வருதல், மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, இரவு 7.00 மணிக்கு கணபதி ஹோமம், இரவு 8.30 மணிக்கு முதற்கால யாக பூஜை, இரவு 10.00 மணிக்கு மகா பூர்ணாகுதி பூஜை நடைபெறுகிறது. 8ம் தேதி காலை 5.30 மணி முதல் கோ பூஜை, நான்காம் கால யாக பூஜை, காலை 8.30 மணிக்கு விநாயகர், பாலமுருகன், ராமலிங்க சவுண்டம்மன் விமானம் மகா கும்பாபிஷேகமும்; காலை 8.50 மணிக்கு விநாயகர், பாலமுருகன், ராமலிங்க சவுண்டம்மன் மூலாய கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.