/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: வங்கி அதிகாரிகள் மீது வழக்குரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: வங்கி அதிகாரிகள் மீது வழக்கு
ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: வங்கி அதிகாரிகள் மீது வழக்கு
ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: வங்கி அதிகாரிகள் மீது வழக்கு
ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: வங்கி அதிகாரிகள் மீது வழக்கு
ADDED : ஆக 30, 2011 12:22 AM
பேரூர் : பேரூர் அருகே, ரூ.3.44 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, வங்கி அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கோவை, கணபதியைச் சேர்ந்தவர் அன்வர்தீன் (82).
இவருக்கு,பேரூர் செட்டிபாளையம், தட்டாந்தோட்டத்தில் 3.44 ஏக்கர் பூமி உள்ளது. இந்த பூமியை,பேரூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் குத்தகைக்கு பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்வர்தீனுக்கு தெரியாமல், அவரது பூமியை, போலியான ஆவணங்கள் மூலம் தயார் செய்து, ஆர்.எஸ்., புரம், வங்கியில்மோசடியாக சுந்தர்ராஜ் கடன்பெற்றுள்ளார். சுந்தர்ராஜால் கடனை திருப்பித் தர முடியாததால், இடத்தை வங்கி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, அன்வர்தீன் அளித்த புகாரின் பேரில், பேரூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது, பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.3.44 கோடி ஆகும்.


