/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாவட்டத்தில் 25 எஸ்.ஐ.,க்கள் அதிரடி மாற்றம்மாவட்டத்தில் 25 எஸ்.ஐ.,க்கள் அதிரடி மாற்றம்
மாவட்டத்தில் 25 எஸ்.ஐ.,க்கள் அதிரடி மாற்றம்
மாவட்டத்தில் 25 எஸ்.ஐ.,க்கள் அதிரடி மாற்றம்
மாவட்டத்தில் 25 எஸ்.ஐ.,க்கள் அதிரடி மாற்றம்
ADDED : ஆக 29, 2011 11:11 PM
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், 20 நேரடி எஸ்.ஐ.,க்கள் மற்றும் 5 சிறப்பு எஸ்.ஐ.,க்களை மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்து, போலீஸ் எஸ்.பி., வனிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சோழவரம் எஸ்.ஐ., பத்மநாபன் ஆரம்பாக்கத்துக்கும், மீஞ்சூர் எஸ்.ஐ., பஞ்சாட்சரம் பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவுக்கும், திருவள்ளூர் தாலுகா எஸ்.ஐ., வின்சி தினகரன் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகத்துக்கும், ஊத்துக்கோட்டை எஸ்.ஐ., குருநாதன் பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அதேபோல், பொதட்டூர்பேட்டை எஸ்.ஐ., தயாளன் பள்ளிப்பட்டுக்கும், பெரியபாளையம் எஸ்.ஐ., ஏகாம்பரம் ஆரணிக்கும், காட்டூர் எஸ்.ஐ., சண்முகம் சோழவரத்துக்கும், திருப்பாலைவனம் எஸ்.ஐ., கோவர்தனம் காட்டூருக்கும், கும்மிடிப்பூண்டி எஸ்.ஐ., லாரன்ஸ் மீஞ்சூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.பாதிரிவேடு எஸ்.ஐ., டில்லிகுமார் திருவேற்காடுவுக்கும், வெள்ளவேடு எஸ்.ஐ., மனோகரன் புல்லரம்பாக்கத்துக்கும், ஆரம்பாக்கம் எஸ்.ஐ., தங்கராஜ் திருப்பாலைவனத்துக்கும், கே.கே.சத்திரம் எஸ்.ஐ., பாபுஜோதி பொதட்டூர் பேட்டைக்கும், ஆர்.கே.பேட்டை எஸ்.ஐ., அலமேலு கடம்பத்தூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.பொதட்டூர்பேட்டை எஸ்.ஐ., குணசேகரன் சிப்காட்டுக்கும், ஆரணி எஸ்.ஐ., மூர்த்தி சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், சோழவரம் எஸ்.ஐ., குமரன் ஊத்துக்கோட்டைக்கும், செவ்வாப்பேட்டை எஸ்.ஐ., தேவிகா நில அபகரிப்பு பிரிவுக்கும், ஊத்துக்கோட்டை எஸ்.ஐ., ரஜினிகாந்த் பொன்னேரிக்கும், பெரியபாளையம் மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ., பாரதி செவ்வாப்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.மேலும்,கே.கே.சத்திரம் சிறப்பு எஸ்.ஐ.,சதாசிவம் செவ்வாப்பேட்டைக்கும், செவ்வாப்பேட்டை சிறப்பு எஸ்.ஐ., சேது புல்லரம்பாக்கத்துக்கும், திருப்பாலைவனம் சிறப்பு எஸ்.ஐ., துரை சோழவரத்துக்கும், திருத்தணி தனபால் மணவாளநகருக்கும், தியாகராஜன் ஆர்.கே.பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.