/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் இறப்பு அச்சம் தேவையற்றது என அறிவிப்புஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் இறப்பு அச்சம் தேவையற்றது என அறிவிப்பு
ஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் இறப்பு அச்சம் தேவையற்றது என அறிவிப்பு
ஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் இறப்பு அச்சம் தேவையற்றது என அறிவிப்பு
ஆக்ஸிஜன் குறைவால் மீன்கள் இறப்பு அச்சம் தேவையற்றது என அறிவிப்பு
ADDED : ஆக 29, 2011 01:01 AM
ஈரோடு: பவானி யூனியன் வரதநல்லூர் பஞ்சாயத்து தாளக்குளத்தில் சமீபத்தில்
மீன்கள் இறந்து மிதந்தன.
குளத்தில் விஷம் கலந்ததால் மீன்கள் இறந்தது என்று
மக்கள் மத்தியில் கருத்து ஏற்பட்டது. கலெக்டர் காமராஜ் உத்தரவுப்படி,
அக்குளத்தில் உள்ள மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டு, குளத்தின் நீர்
ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மீன்வளத்துறையினர் ஆய்வு செய்தபின்,
'குளத்தில் விஷம் ஏதும் கலக்கவில்லை. குளத்தில் ஆக்ஸிஜன் அளவு
குறைந்ததால்தான் இறந்தது' என, தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அக்குளத்தில்
உள்ள நீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு, புதிய நீர் குளத்தில் விட
நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், தற்போது பெய்து வரும் தொடர் மழையால்
அக்குளத்தில் அதிக அளவு நீர் தேங்கி உள்ளது. இதனால், குளத்து நீரை
முற்றிலுமாக வெளியேற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 33 ஏக்கரில் குளம்
அமைந்துள்ளதால், உடனடியாக நீரை வெளியேற்ற இயலவில்லை. இக்குளத்தை நேற்று
கலெக்டர் காமராஜ், பவானி எம்.எல்.ஏ., பி.ஜி.நாராயணன், நேரில்
பார்வையிட்டனர். ''இக்குளத்தில் அதிக அளவு நீர் உள்ளது. மழை நீர் அதிகமாக
வந்ததால் தேக்கம் அதிகமாக உள்ளது. நீர் நல்ல நிலையில் உள்ளது.
ஆய்வறிக்கையில் இதை உறுதிப்படுத்தி உள்ளோம். குளத்து நீர் குறித்து
பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை'' என, கலெக்டர்
தெரிவித்தார். கோபி ஆர்.டி.ஓ., பழனிசாமி, பவானி தாசில்தார் விஜயபாலன்
ஆகியோர் உடனிருந்தனர்.