/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கரும்பு, நெல் விலையை உயர்த்திட விவசாய சங்கம் கோரிக்கைகரும்பு, நெல் விலையை உயர்த்திட விவசாய சங்கம் கோரிக்கை
கரும்பு, நெல் விலையை உயர்த்திட விவசாய சங்கம் கோரிக்கை
கரும்பு, நெல் விலையை உயர்த்திட விவசாய சங்கம் கோரிக்கை
கரும்பு, நெல் விலையை உயர்த்திட விவசாய சங்கம் கோரிக்கை
ADDED : ஆக 28, 2011 11:24 PM
விழுப்புரம் : இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக் கூடத்தில் நடந்தது.
தலைவர் ராஜா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தணிகாசலம், யோகநாதன், அஜீத்தன், புத்தி சிகாமணி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் விருத்தகிரி வரவேற்றார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெ., விற்கு வாழ்த்து தெரிவித்தல், கிராமப்புற மக்களுக்கு இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு, தேசிய விவசாயிகள் ஆணையக்குழு தலைவர் எம்.எஸ்.சுவாமி நாதன் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். வரும் 2011-2012ம் ஆண்டு பருவத்திற்கு கரும்பு ஒரு டன்னிற்கு 2,500 ரூபாயும், நெல் குவிண்டாலுக்கு 1,500 ரூபாயும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை சங்க நிர்வாகிகள் கோவிந்தன், ஆறுமுகம், பாண்டியன், வெங்கடசாமி, பரமசிவம், பாலசுப்ரமணியம், கலிவரதன், ஆந்திர மாநில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெயச்சந்திர சவுத்ரி, விஜயசந்திர நாயுடு, பயிர்வாரிய குழு செயலர்கள் கோதண்டராமன், சுப்ரமணியன், கண்ணன், ஆர்ஜீதம், விஸ்வ நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.