கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம்
கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம்
கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை முகாம்
ADDED : ஆக 27, 2011 11:55 PM
கரூர்: கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை முகாம் நடந்தது.
கரூர் மாவட்டம் கடவூர் யூனியன் வீரணம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை முகாம் நடந்தது. கரூர் சரக கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமை வகித்தார். இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவன திருச்சி மண்டல கள அலுவலர்கள் பொம்மனன், மனோஜ்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில் ஆவின் டாக்டர்கள் துரையரசன், செந்தில்ராஜா, வேலுசாமி ஆகியோர் பங்கேற்று, 7 கால்நடைகளுக்கு சினை ஊசியும், 44 கால்நடைகளுக்கு சினை பரிசோதனையும், 197 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சையும், 44 கால்நடைகளுக்கு பொது சிகிச்சையும் என மொத்தம் 292 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். கரூர் மாவட்ட கூட்டுறவு தனி அலுவலர் குழந்தைவேலு, கரூர் ஆவின் பால் விரிவாக்க அலுவலர் அருணாசலம், கூட்டுறவு ஒன்றிய பணியாளர் சிவானந்தம், வீரணம்பட்டி சங்க செயலாளர் கிருஷ்ணசாமி, விராலிபட்டி சங்க செயலாளர் ஜெகநாதன், சீத்தப்பட்டி சங்க செயலாளர் மாரியப்பன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.


