ADDED : ஆக 26, 2011 01:00 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த
நாள் விழா நடந்தது.
தர்மபுரி நெசவாளர் காலனி சவுடேஸ்வரியம்மன் கோவிலில்
சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு,
மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.
எம்.எல்.ஏ., பாஸ்கரன், அன்னதானம் வழங்கினார். சோகத்தூரில் கட்சி கொடியேற்றி
வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை டாக்டர்
இளங்கோவன், எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் வழங்கினர். அவைத்தலைவர் தம்பி
ஜெய்சங்கர், துணை செயலாளர் மனோகரன், பொருளாளர் காவேரிவர்மன், நகர செயலாளர்
வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, விஜயசங்கர், மணி, குமார், ரகு,
செல்வம், அன்பழகன், உதயகுமார், தொழிற்சங்க செயலாளர் வெங்கட்ராஜ் உட்பட பலர்
கலந்து கொண்டனர். * காரிமங்கலத்தில் நடந்த விழாவுக்கு, ஒன்றிய செயலாளர்
மணி தலைமை வகித்தார். நகர செயலாளர் வக்கீல் ரஞ்சித் குமார் முன்னிலை
வகித்தார். மொரப்பூர் ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று ராமசாமி கோவில்
அருகே, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு
வழங்கினர்.