/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பதவி உயர்வில் முரண்பாடுகளை களைய பி.எஸ்.என்.எல்., ஓட்டுனர்கள் கோரிக்கைபதவி உயர்வில் முரண்பாடுகளை களைய பி.எஸ்.என்.எல்., ஓட்டுனர்கள் கோரிக்கை
பதவி உயர்வில் முரண்பாடுகளை களைய பி.எஸ்.என்.எல்., ஓட்டுனர்கள் கோரிக்கை
பதவி உயர்வில் முரண்பாடுகளை களைய பி.எஸ்.என்.எல்., ஓட்டுனர்கள் கோரிக்கை
பதவி உயர்வில் முரண்பாடுகளை களைய பி.எஸ்.என்.எல்., ஓட்டுனர்கள் கோரிக்கை
ADDED : ஆக 23, 2011 11:40 PM
கடலூர் : கடலூர் மற்றும் புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., ஓட்டுனர் சங்க மாவட்ட
மாநாடு நடந்தது. கடலூர் பி.எஸ்.என். எல்., பொது மேலாளர் அலுவலகத்தில்
நடந்த மாநாட்டில் மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். கடலூர்
மாவட்டத் தலைவர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். கடலூர், புதுச்சேரி
ஒருங்கிணைந்த மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிறப்பு
விருந்தினரான மாநிலச் செயலர் வெங்கடபதி பேசினார். சந்திரசேகர், மதிவாணன்,
ராஜரத்தினம் வாழ்த்திப் பேசினர். ஒருங்கிணைந்த மாவட்ட புதிய தலைவராக சேகர்,
செயலராக கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக கலியமூர்த்தி, தணிக்கையாளராக
சிவசங்கர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒவ்வொரு ஊழியரும் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தனியார் நிறுவன
சந்தாதாரர்களை பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களாக மாற்றுவது. நான்கு கட்ட
பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உட்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேகர் நன்றி கூறினார்.