/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டத்தில் சமச்சீர் கல்வி பாட நூல் 100 சதவீதம் வினியோகம்கோவை மாவட்டத்தில் சமச்சீர் கல்வி பாட நூல் 100 சதவீதம் வினியோகம்
கோவை மாவட்டத்தில் சமச்சீர் கல்வி பாட நூல் 100 சதவீதம் வினியோகம்
கோவை மாவட்டத்தில் சமச்சீர் கல்வி பாட நூல் 100 சதவீதம் வினியோகம்
கோவை மாவட்டத்தில் சமச்சீர் கல்வி பாட நூல் 100 சதவீதம் வினியோகம்
ADDED : ஆக 22, 2011 10:59 PM
கோவை : ''கோவையிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 100 சதவீதம் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் சென்றடைந்து விட்டன,'' என முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறினார்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஒண்டிப்புதூரிலுள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோன்களிலிருந்து சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு பெரும்பாலான பாடப்புத்தகங்கள் சென்றடைந்து விட்டன. தனியார் பள்ளிகளுக்கு புத்தக விலைக்கான வரைவோலை பெற்று, புத்தகங்கள் அனுப்பப்படுகிறது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில்,''கோவை மாவட்டம் தவிர, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்களின் நலன் கருதியும் ஒண்டிப்புதூரிலுள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் குடோன்களில் இரவு, பகலாக புத்தகம் அனுப்பும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகம் அனுப்பும் பணி 100 சதவீதம் முடிவடைந்து விட்டது,'' என்றார்.