/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தொடர் லாரி ஸ்டிரைக் எதிரொலிநெல்லையில் காய்கறி விலை "விர்ர்ர்'..தொடர் லாரி ஸ்டிரைக் எதிரொலிநெல்லையில் காய்கறி விலை "விர்ர்ர்'..
தொடர் லாரி ஸ்டிரைக் எதிரொலிநெல்லையில் காய்கறி விலை "விர்ர்ர்'..
தொடர் லாரி ஸ்டிரைக் எதிரொலிநெல்லையில் காய்கறி விலை "விர்ர்ர்'..
தொடர் லாரி ஸ்டிரைக் எதிரொலிநெல்லையில் காய்கறி விலை "விர்ர்ர்'..
ADDED : ஆக 22, 2011 02:33 AM
திருநெல்வேலி:நெல்லையில் லாரி ஸ்டிரைக் எதிரொலியாக காய்கறிகள் விலை
அதிகரிக்க துவங்கியது.டீசல் விலையை குறைப்பது, சுங்கவரி கட்டண வசூல்,
இன்சூரன்ஸ் கட்டணம், டயர், உதிரிப்பாகங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துவது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா,
புதுச்சேரி, மகாராஷ்டிராவில் கடந்த 18ம்தேதி நள்ளிரவு முதல் லாரிகள்,
மினிலாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்கை துவக்கின. இப்போராட்டத்துக்கு அகில
இந்திய மோட்டார் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.நெல்லை மாவட்டத்தில் 4,500
லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளன. ஸ்டிரைக்
காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ஒரு கோடி ரூபாய், அரசுக்கு 2 கோடி
ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது என மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம்
தெரிவித்தது.
மூன்றாம் நாளான நேற்று நெல்லை மாவட்டத்தில் லாரிகள் தொடர்ந்து ஸ்டிரைக்கில்
பங்கேற்றன. ஸ்டிரைக் காரணமாக நெல்லைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து
காய்கறி வரத்து இல்லை. ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், கயத்தாறு
உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லோடு ஆட்டோக்கள் மூலம் காய்கறி லோடு
வருகிறது. நெல்லையில் இருந்து கேரளாவிற்கு காய்கறி லோடு கொண்டு
செல்லப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பீன்ஸ், சவ்சவ், தக்காளி
உள்ளிட்ட காய்கறிகள் அழுகி வியாபாரிகளுக்கு நஷ்டம்
ஏற்பட்டுள்ளது.காய்கறிவரத்து குறைவால் நெல்லை, பாளை. மார்க்கெட்களில்
நேற்று காய்கறிகளின் விலை வழக்கத்தை விட சற்று அதிகரித்தது. ஸ்டிரைக்
தொடர்ந்தால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும், விலையும் பலமடங்கு
அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு
பீடிலோடு கொண்டு செல்வதிலும் 'சிக்கல்' ஏற்பட்டுள்ளது. இதனால்
பீடித்தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளது.