Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனை

குச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனை

குச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனை

குச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனை

ADDED : ஆக 21, 2011 02:08 AM


Google News

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் குச்சி கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு அருகே சாலையோரங்களில் கடை விரித்து கிழங்கு விற்பனையில் இறங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சளுக்கு அடுத்தப்படியாக இறவை பாசன பகுதிகளில் அதிக அளவில் குச்சி கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் கிழங்குகள் சேலம் சேகோ பேக்டரிக்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு செல்கிறது.



அதிக அளவில் விவசாயிகள் வீரிய ரக கிழங்குகளை பயிர் செய்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் மட்டும் நாட்டு ரக குச்சி கிழங்குகளை பயிர் செய்து விற்பனை செய்கின்றனர். தற்போது, பாலக்கோடு, தர்மபுரி தாலுகா பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த குச்சி கிழங்குகள் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்தாண்டை விட இந்தாண்டு போதிய சீதோஷண நிலை இருந்ததால், குச்சி கிழங்குகள் எதிர்பார்த்த அளவில் உற்பத்தி கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லறை வியாபாரிகள் குச்சி கிழங்குகளை விவசாய தோட்டங்களுக்கு சென்று கிலோ 13 ரூபாய் வரையில் கொள்முதல் செய்து நகரப்பகுதியில் தள்ளு வண்டிகளில் கிலோ 20 ரூபாய் வரையில் விற்பனை செய்கின்றனர்.



விவசாயிகளை விட வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வரும் நிலையில், பல விவசாயிகள் தற்போது, தங்கள் தோட்டங்களில் அறுவடை செய்யும் கிழங்குகளை சாலையோரங்களில் கடை விரித்து விற்பனன செய்ய துவங்கி விட்டனர். சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுவதால், அந்த வழியாக செல்வோர் குச்சி கிழங்குகளை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ கிழங்கு 15 ரூபாய்க்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். விற்பனைக்கு ஏற்றவாறு கிழங்குகளை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us