Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக மாவட்டத்தில் 4,974 ஓட்டுப்பெட்டிகள்

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக மாவட்டத்தில் 4,974 ஓட்டுப்பெட்டிகள்

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக மாவட்டத்தில் 4,974 ஓட்டுப்பெட்டிகள்

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக மாவட்டத்தில் 4,974 ஓட்டுப்பெட்டிகள்

ADDED : ஆக 21, 2011 01:31 AM


Google News
தேனி : மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்துவதற்காக, 4,974 ஓட்டுப்பெட்டிகள் தயார்நிலையில், வைக்கும் பணி நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல், ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி நடத்தப்பட உள்ளது. ஊராட்சி வார்டு மெம்பர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய நான்கு ஓட்டுச்சீட்டுகள் இதில் பயன்படுத்தப்பட உள்ளன. இத்தேர்தலில் வார்டு வாரியாக ஓட்டு போடுவதற்கான, ஓட்டுச்சீட்டு பெட்டிகளை தயார் செய்யும் பணி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடக்கிறது. இவற்றை பழுதுபார்த்து வர்ணம் பூசும் பணிகள் நடக்கின்றன. மாவட்டத்தில் ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், மாவட்ட கவுன்சிலர் வார்டுகள் எனஅனைத்து வார்டுகளிலும் 4,974 ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.இவை அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கைகள் துவங்கும் வரை, இவை பாதுகாப்பாக அந்தந்த, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us