கி.பி., 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயிலாப்பூர் கல்வெட்டுகளில், கோட்டூர் பற்றிய குறிப்பு உள்ளது.
கோட்டூர் என்பது ஒரு நாட்டுப்பிரிவு என்பதைக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துள் அடங்கிய நாட்டுப்பிரிவாக கோட்டூர் நாடு இருந்திருக்கிறது. கோட்டூர் நாட்டுள் அடங்கிய ஊராக திருவான்மியூர் இருந்துள்ளது.
'கோட்டூர் நாட்டு சண்டேசுவர நாயனார்க்கு' என்பன போன்ற கல்வெட்டு வரிகள் மூலம் கி.பி., 12ம் நூற்றாண்டுக்கு முந்தையது இக்குடியிருப்புப் பகுதி எனத்தெரியவருகிறது.
கோடு என்றால் வளைவு என்று ஒரு பொருள் உண்டு. அடையாறு ஆறு, சைதாப்பேட்டையில் இருந்து, கோட்டூர் வழியாக அடையாறு சென்று, கடலில் கலக்கிறது. கோட்டூர் அருகே வளைந்து பின் செல்கிறது. ஆற்றங்கரையில் வளைவில் இருக்கும் ஊர் என்ற பொருளில் கோட்டூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.