தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அமைகிறது
தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அமைகிறது
தமிழ்நாட்டில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அமைகிறது
UPDATED : ஆக 19, 2011 06:45 PM
ADDED : ஆக 19, 2011 05:46 PM
சென்னை : நாட்டிலேயே, முதன்முறையாக, தமிழ்நாட்டில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், சட்டசபையில் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, உயர்நிலைக் கமிட்டியின் தலைமையில் செயல்பட உள்ள இந்த தேர்வாணையத்தின் மூலம் சுகாதாரத்துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதன்மூலம், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.