/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தார் சாலை போடுவதில் நகராட்சியில் பாரபட்சம்தார் சாலை போடுவதில் நகராட்சியில் பாரபட்சம்
தார் சாலை போடுவதில் நகராட்சியில் பாரபட்சம்
தார் சாலை போடுவதில் நகராட்சியில் பாரபட்சம்
தார் சாலை போடுவதில் நகராட்சியில் பாரபட்சம்
ADDED : ஆக 17, 2011 02:56 AM
நாமக்கல்: நகராட்சி 18வது வார்டு கருப்பனார் கோவில் வீதியில், சாலை
அமைப்பதில் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதால், மக்கள் கடும்
அதிருப்தியடைந்துள்ளனர்.
அதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடமும் புகார்
செய்துள்ளனர். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் 18வது வார்டு
கருப்பனார் கோவில் வீதியில், பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப் பணி
மேற்கொள்ளப்பட்டது. அந்த பணி நிறைவு பெற்றதையடுத்து, தார்சாலை அமைக்கும்
பணி துவங்கப்பட்டுள்ளது. வீதியில் குறிப்பிட்ட தூரம் வரை சாலை போடுவதற்காகல
மண் கொட்டி கிராவல் பரப்பினர். மீதிப் பகுதி அப்படியே மண் சாலையாக
விடப்பட்டுள்ளது. அது அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியது. குறிப்பிட்ட தூரம் வரை மண் கொட்டி சாலை உயர்த்தப்பட்டதால்,
சாலை போடாத பகுதி பள்ளமடைந்துள்ளது. மழைக்காலங்களில் அப்பகுதியில் தண்ணீர்
குளம்போல் தேங்கி, சாலையில் நடக்க முடியாத நிலை உருவாகும் என, அங்குள்ள
மக்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். அதுதொடர்பாக, நகராட்சி
நிர்வாகத்தினரிடம், 18வது வார்டு கருப்பனார் கோவில் வீதி மக்கள் புகார்
செய்தனர். நடவடிக்கை எடுப்பதாக எவ்வித உறுதி மொழியும் அளிக்கப்படாததால்,
இப்பிரச்னை சம்மந்தமாக மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மக்கள் புகார்
செய்ய முடிவு செய்துள்ளனர்.


