வீட்டு வேலை தொழிலாளர் மாநில கோரிக்கை மாநாடு
வீட்டு வேலை தொழிலாளர் மாநில கோரிக்கை மாநாடு
வீட்டு வேலை தொழிலாளர் மாநில கோரிக்கை மாநாடு
ADDED : ஆக 16, 2011 06:18 PM
சென்னை: 'வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு, சமூக நலன்களை உள்ளடக்கிய தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்,'' என, உழைக்கும் பெண்கள் மாநில கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது.
உழைக்கும் பெண்கள் மாநில கோரிக்கை மாநாடு (ஏ.ஐ.டி.யு.சி.,), சென்னையில் நடந்தது. மாநில துணைத் தலைவர் வஹிதா நிஜாம் தலைமை வகித்தார். மாநாட்டில், தமிழக பஞ்சாலைகளில், சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் உள்ள நவீன கொத்தடிமையை தடுக்கவும், வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு, சமூக நலன்களை உள்ளடக்கிய, தனிச்சட்டத்தை மாநில அரசு கொண்டு வர வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், ஆறு மாத மகப்பேறு விடுப்பை கட்டாயமாக்கி, பேறு கால உதவியாக 24 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில பொதுச் செயலர் தியாகராஜன், முன்னாள் எம்.பி., சுப்பராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பத்மாவதி, கண்ணன் மற்றும் சவுந்திர பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 'மாநாட்டு கோரிக்கைகளை முதல்வரிடம் அளிப்போம்' என மாநாட்டு தலைவர் வஹிதா நிஜாம் கூறினார்.