/உள்ளூர் செய்திகள்/சேலம்/சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் வரும் 18ம் தேதிக்குள் முடிக்க உத்தரவுசமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் வரும் 18ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் வரும் 18ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் வரும் 18ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் வரும் 18ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு
ADDED : ஆக 16, 2011 04:09 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும், சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
வரும் 18ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்கி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது. நேற்று பெரும்பாலான பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி நடந்தது. கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்கி, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜராஜன் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு ஏற்கனவே புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று (நேற்று) சுதந்திர தினவிழாவாக இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.சேலம் மாவட்டத்தில் சேலம், சங்ககிரி ஆகிய கல்வி மாவட்டங்கள் உள்ளன. சேலம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகள் என, 174 உள்ளது. சங்ககிரி கல்வி மாவட்டத்தில், 117 பள்ளிகள் உள்ளன. இரண்டு கல்வி மாவட்டத்திலும் பயிலும், ஏழாம் வகுப்பில், 29 ஆயிரத்து 375 மாணவ, மாணவியர், எட்டாம் வகுப்பில், 32 ஆயிரத்து 117 மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில், 47 ஆயிரத்து 163 மாணவர்கள், பத்தாம் வகுப்பில் பயிலும், 43 ஆயிரத்து 302 மாணவர்களுக்கு இலவசமாக சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. வரும் 18ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைத்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயராமன் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் மொத்தம், 1,502 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், 28 ஆயிரத்து 124 பேர், மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், 30 ஆயிரத்து 66 பேர், நான்காம் வகுப்பில் பயிலும், 32 மாணவர்கள் 32 ஆயிரத்து 115 பேர், ஐந்தாம் வகுப்பில் பயிலும், 32 ஆயிரத்து 137 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகிறது. விரைவில் இப்பணி முடிந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.


