Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/ஒரே நிலம் 2 பேரிடம் விற்பனை வாங்கிய வர்களுக்குள் அடிதடி

ஒரே நிலம் 2 பேரிடம் விற்பனை வாங்கிய வர்களுக்குள் அடிதடி

ஒரே நிலம் 2 பேரிடம் விற்பனை வாங்கிய வர்களுக்குள் அடிதடி

ஒரே நிலம் 2 பேரிடம் விற்பனை வாங்கிய வர்களுக்குள் அடிதடி

ADDED : ஆக 15, 2011 01:15 AM


Google News
மன்னார்குடி: மன்னார்குடி அரு கே,ஒரேஇடத்தைஇருவருக்கு வி ற்ற நபர் தலைமறைவானார்.

இட த்தை வாங்கிய நபர்களிடையே நடந்த அடிதடி தகராறில்நா ன்கு பேர் கைது செய்யப்பட்டனர். மன்னார்குடி அருகே மரக்கடை வ.உ.சி., நகரை சேர்ந்தவர் அகமது செய்யது (52). இவருக்கு சொந்தமான 70 குழி (ஒரு குழி 144 சதுர அடி) மலைப்பகுதியை, அதே பகுதியில் வசிக்கும் வில்லியம்ஸ் என்பவருக்கு கிறிஸ்தவ சர்ச் அமைக்க இடத்தை விற்றார். வில்லியம்ஸ்க்கு தெரியாம ல், அதே இடத்தை ராஜேந்திரன் என்பவரிடமும் அகமது செய்யது விற்பனை செய்துள்ளார். நேற்று முன்தினம் வில்லியம்ஸ், சர்வேயரை அழைத்து வந்து, இடத்தை அளந்து, வேலி அமைந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், அவரது ஆதரவாளரர்கள் சுத ர்சன், சந்தானம், கலியபெருமாளுடன் சென்று வேலி அமைப்பதை தடுத்தார். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பிலும் கூத்தாநல்லுர் போலீஸ் ஸ்÷ டஷனில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீஸார் வழக்குபதிவு செய்து, வில்லியம்ஸ், அவரது ஆதரவாளர் ஜெயராமன் மற்றும் ராஜேந்திரன், அவரது ஆதரவாளர் கலியபெருமாள் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். ஒரே இடத்தை மோசயாக இருவருக்கு விற்பனை செய்து, தலைமறைவாகி விட்ட அகமதுவை போலீஸார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us