/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொ.மு.ச., கட்டடம் திறப்புமாவட்ட செயலர் அழைப்புதொ.மு.ச., கட்டடம் திறப்புமாவட்ட செயலர் அழைப்பு
தொ.மு.ச., கட்டடம் திறப்புமாவட்ட செயலர் அழைப்பு
தொ.மு.ச., கட்டடம் திறப்புமாவட்ட செயலர் அழைப்பு
தொ.மு.ச., கட்டடம் திறப்புமாவட்ட செயலர் அழைப்பு
ADDED : ஆக 13, 2011 02:51 AM
குறிஞ்சிப்பாடி:நெய்வேலியில் தொ. மு.ச., பொன்விழா புதிய கட்டடம் திறப்பு
விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க., மாவட்ட செயலர்
பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள
அறிக்கை:நாளை (14ம் தேதி) தொ.மு.ச., பொன்விழா புதிய கட்டடத்தை திறந்து
வைக்கவும், டவுன்ஷிப் மத்திய பஸ் நிலையத் திடலில் நடக்கும் பொதுக்
கூட்டத்தில் பங்கேற்கவும் கட்சியின் பொருளாளர், முன்னாள் துணை முதல்வர்
ஸ்டாலின் நெ#வேலி வருகிறார்.
அதனையொட்டி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளைச் செயலர்கள்
மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி
ஒன்றிய, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள், முன்னாள், இந்நாள்
உள்ளாட்சி பிரதிநிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி, அனைத்து அணி
நிர்வாகிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், செயல்வீரர்களும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.