/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு :செயல்அலுவலரிடம் புகார்பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு :செயல்அலுவலரிடம் புகார்
பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு :செயல்அலுவலரிடம் புகார்
பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு :செயல்அலுவலரிடம் புகார்
பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு :செயல்அலுவலரிடம் புகார்
ADDED : ஆக 11, 2011 11:22 PM
அன்னூர் : அன்னூரில், அனுமதியில் லாமல் கூடுதலாக வார சந்தை நடப்பதால் பேரூராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற் படுவதாக புகார் எழுந்துள்ளது.
அன்னூரில் ஓதிமலை ரோட்டில் வாரச்சந்தை திடல் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வார சந்தை நடக்கிறது. அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் வந்து பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர். காரமடை, மேட்டுப்பாளையம், புளியம்பட்டி, அவிநாசியிலிருந்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் பொருட்கள் விற்பனை செய்கின்றனர். சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமை ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தின் மூலம் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு 11 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சனிக்கிழமை மட்டும் நடத்த வேண்டிய சந்தை வாரத்திற்கு மூன்று நாட்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அன்னூர் பேரூராட்சி, 15வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி (தி.மு.க.,) செயல் அலுவலரிடம் கொடுத்த புகார் மனுவில் 'வாரத்தில் ஒரு நாள் சந்தை நடத்த மட்டும் சுங்கம் நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளது. ஆனால் மூன்று நாட்கள் சந்தை நடப்பதால், வியாபாரிகளிடம் கூடுதலாக சுங்கம் வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் தொகை பேரூராட்சிக்கு வருவதில்லை. தனிநபர்களுக்கு செல்கிறது. இதனால் பேரூராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது' என, தெரிவித்துள்ளார். இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ் கூறுகையில்,''இப்புகார் குறித்து ஒப்பந்ததாரர்களிடம் விசாரித்தேன். சனிக்கிழமையன்று இறைச்சி கடைகள் செயல்படுவதில்லை. அந்த கடைகள் மட்டும் அடுத்த நாளான ஞாயிறு அன்று செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரிக்கப்படும்,'' என்றார்.