/உள்ளூர் செய்திகள்/தேனி/பெரியகுளம் பகுதியில் கள்ள நோட்டு புழக்கம் தாராளம்பெரியகுளம் பகுதியில் கள்ள நோட்டு புழக்கம் தாராளம்
பெரியகுளம் பகுதியில் கள்ள நோட்டு புழக்கம் தாராளம்
பெரியகுளம் பகுதியில் கள்ள நோட்டு புழக்கம் தாராளம்
பெரியகுளம் பகுதியில் கள்ள நோட்டு புழக்கம் தாராளம்
ADDED : ஆக 09, 2011 01:25 AM
தேவதானப்பட்டி : பெரியகுளம் பகுதியில் கள்ள நோட்டு புழக்கம் தாராளமாக உள்ளது.
வங்கிகளில் வரும் கள்ள நோட்டுக்கள் கிழித்து எரிக்கப்படுகின்றன.பெரியகுளம் தாலுகாவில் 17 கிராம ஊராட்சிகள், 5 பேரூராட்சிகளில் உள்ளன. 90க்கும் அதிகமான உட்கடை கிராமங்கள் உள்ளன. சுயஉதவிக்குழுக்களின் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு கள்ள நோட்டு குறித்த விழிப்புணர்வு இல்லை. சில நாட்களாக வடுகபட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தில் 100, 500,1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சில வங்கிகளில் வரும் கள்ள நோட்டுக்களை அதிகாரிகள் கிழித்து எரிக்கின்றனர். பெரியகுளம் பகுதியில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்களை கட்டுப்படுத்த,போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


