/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஆற்றுக்கரையில் வீசப்பட்ட ஐந்து நாள் பெண் குழந்தைஆற்றுக்கரையில் வீசப்பட்ட ஐந்து நாள் பெண் குழந்தை
ஆற்றுக்கரையில் வீசப்பட்ட ஐந்து நாள் பெண் குழந்தை
ஆற்றுக்கரையில் வீசப்பட்ட ஐந்து நாள் பெண் குழந்தை
ஆற்றுக்கரையில் வீசப்பட்ட ஐந்து நாள் பெண் குழந்தை
ADDED : ஆக 09, 2011 01:14 AM
திருச்சி: அரியமங்கலத்தில் ஆற்றுக்கரையோரத்தில், பிறந்து ஐந்து நாட்களே ஆன
பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் உக்கடை அற்புதசாமிபுரத்தில் உய்யக்கொண்டான்
வாய்க்கால் ஓடுகிறது. கரையோரத்தில் ஒரு அழகிய பெண் குழந்தை கதறி அழுதபடி
கிடந்தது. தொப்புள் கொடி கூட காயாத நிலையில் கிடந்த குழந்தையை,
அப்பகுதியில் சென்ற மக்கள் பார்த்து அரியமங்கலம் போலீஸாருக்கு தகவல்
கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீஸார் குழந்தையை மீட்டனர். திருச்சி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை வழங்கிய
டாக்டர்கள், குழந்தை பிறந்து ஐந்து நாட்களே ஆகியுள்ளது என்று
தெரிவித்தனர்.குழந்தையை அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க
முடிவெடுத்துள்ளனர். குழந்தையை வீசிச் சென்ற பெண்ணை போலீஸார் தேடுகின்றனர்.


