Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாஜி அதிகாரி புகார் சாட்சியை அச்சுறுத்தும் வகையில் பொய் வழக்கு

மாஜி அதிகாரி புகார் சாட்சியை அச்சுறுத்தும் வகையில் பொய் வழக்கு

மாஜி அதிகாரி புகார் சாட்சியை அச்சுறுத்தும் வகையில் பொய் வழக்கு

மாஜி அதிகாரி புகார் சாட்சியை அச்சுறுத்தும் வகையில் பொய் வழக்கு

ADDED : ஆக 08, 2011 03:13 AM


Google News
நாமக்கல்: 'நில பிரச்னை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில், சாட்சியை அச்சுறுத்தும் வகையில், பொய்யான புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை அதிகாரி, எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளார்.

மோகனூர் சர்க்கரை ஆலையில் பி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் துரை. அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தும்பங்குறிச்சியில் உள்ளது. இந்த நிலத்துக்கு கிரைய ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக வழக்கு, கடந்த, 1999ம் ஆண்டு முதல் நாமக்கல் சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் துரை, நாமக்கல் எஸ்.பி., பிரவேஸ்குமாரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும், நாமக்கல் எல்.எம்.ஆர்., தியேட்டர் உரிமையாளர் மோகனரங்கத்துக்கும் நிலப்பிரச்னை வழக்கு, 1999ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கிரய ஒப்பந்தத்துக்கு சாட்சியாக கோபால் என்பவர் கடந்த, 2ம் தேதி சாட்சி அளித்தார். அதை தொடர்ந்து, குறுக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 12ம் தேதி வழக்கு விசாரணைக்கு போடப்பட்டது. அதில், சாட்சி குறுக்கு விசாரணை அன்று வராமல் இருப்பதற்காக கோபால் மீது தியேட்டரை தாக்கியதாக பொய் வழக்கு கொடுத்துள்ளனர். அதன்படி அவரை, போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த, 11 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்குக்காக, தென் அமெரிக்காவில் இருந்து வந்து சாட்சி அளித்துள்ளேன். இது வழக்கில் சாட்சியம் அளிப்பதை தடுக்க செய்த சதியே. வரும் 12ம் தேதி குறுக்கு விசாரணையை தடுத்திட நடக்கும் இச்சதிக்கு, கோபால் மீது வழக்கு பதிந்து அவரை அச்சுறுத்தும் நடவடிக்கையை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us