Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : ஆக 08, 2011 03:13 AM


Google News
ராசிபுரம்: ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 108 பயனாளிகளுக்கு, 3.78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை, துணை சபாநாயகர் தனபால் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட திட்ட முடநீக்கியல் வல்லுனர் சேகர் வரவேற்றார். புதுவாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் தரணி முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் தனபால் தலைமை வகித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட, 108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, ஏழைகளின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மாற்றுதிறனாளிகளுக்கு அதிக அக்கறையுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை மக்களுக்கு இலவசமாக, 20 கிலோ அரிசி, உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம், தற்போது மாற்றுத்திறனாளிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி என்ற மன நிலையையும், தாழ்வு மனப்பான்மையும், எண்ணி வேதனைப்பாடமல் இருக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, ராசிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 108 பயனாளிகளில், 16 பேருக்கு சக்கர நாற்காலியும், 31பேருக்கு மூன்று சக்கர வாகனம், 19 பேருக்கு ஊன்றுகோல், 40 காது கேட்கும் கருவி, 12 கண் கண்ணாடி வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். இதுவரை மாற்றுதிறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு குறைகளை அடங்கிய மனுக்களை, துணை சபாநாயகர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், தாசில்தார் சத்யநாராயணன், டி.எஸ்.ஓ., திருமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ., கலாவதி, நகர அ.தி.மு.க., செயலாளர் பாலசுப்பிரமணியன், நகராட்சி கவுன்சிலர்கள் திருப்பதி, சீனிவாசன், அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி கோபால், ஒன்றிய செயலாளர்கள் காளியப்பன், பொன்னுசாமி, மணி, தாமோதரன், மாவட்ட மகளிரணி துணை தலைவர் ராதா, முன்னாள் யூனியன் சேர்மன் சரோஜினி, தலைமையாசிரியர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us