Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பா.ம.க., பிரமுகர் உட்பட மூவர் கைது

பா.ம.க., பிரமுகர் உட்பட மூவர் கைது

பா.ம.க., பிரமுகர் உட்பட மூவர் கைது

பா.ம.க., பிரமுகர் உட்பட மூவர் கைது

ADDED : ஆக 08, 2011 03:04 AM


Google News
ஓமலூர்: ஓமலூர் அருகே, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த, பா.ம.க., நிர்வாகி உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

ஓமலூர் அடுத்த காமலாபுரம், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமன் (60). இவரது மனைவி பழனியம்மாள் (50) பெயரில், அதே கிராமத்தில், இரு சர்வே எண்ணில் மொத்தமாக 80 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை, 2006 ஜூன் 1ம் தேதி, அதே ஊரில் வசிக்கும் ரத்தினவேல், அண்ணாமலை ஆகியோருக்கு 'பவர் ஆஃப் பட்டா' செய்து கொடுத்துள்ளார் பழனியம்மாள். அவர்கள் இருவரும், செப்டம்பர் 9ல், அவர்களுடைய மனைவிகள் வசந்தா, சின்னம்மா ஆகியோர் பெயரில் நிலத்தை கூட்டாக கிரயம் செய்துள்ளனர். நிலம் விற்கப்பட்டது தெரிந்தும் பழனியம்மாளின் கணவர் ராமன், 80 சென்ட் நிலத்துக்கு போலியான ஆவணம் தயார் செய்தார். அந்த ஆவணத்தை கொண்டு, அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு நிலத்தை அக்ரிமென்ட் போட்டு கொடுத்துள்ளார். பின், ராஜேந்திரன் அந்த நிலத்தை சேட்டு என்பவருக்கு கிரயம் செய்து கொடுக்க, கடைசியில், மோட்டுப்பட்டி ஊராட்சி தலைவரின் கணவரும், பா.ம.க., பிரமுகரான தங்கராஜ் (55) பெயரில், கடந்த 2007ம் ஆண்டு, அக்டோபர் 30ல் நிலம் கிரயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஓமலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வசந்தா, சின்னம்மாவுக்கு ஆதரவாக, 2010ம் ஆண்டு, ஜூலை 23ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து வசந்தா, சின்னம்மா ஆகிய இருவரும், டிசம்பர் 14ம் தேதி அதே ஊரை சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு, 25 சென்ட் நிலத்தை கிரயமும், பின், 55 சென்ட் நிலத்தை கிரய ஒப்பந்தமும் செய்து கொடுத்துள்ளனர். தங்கராஜ். கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 2ல், அதே ஊரை சேர்ந்த சுந்தரம் என்பவருக்கு, 80 சென்ட் நிலத்தை விற்பனை செய்திருப்பது அப்போது தெரியவந்தது. இது பற்றி கேட்ட வசந்தா, சின்னம்மா ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நிலத்தின் மதிப்பு 80 லட்சம் ரூபாய். இது குறித்து, வசந்தா, சின்னம்மாவின் மகன் சதீஷ் ஆகிய இருவரும் சேலம் நில அபகரிப்பு மீட்புக்குழுவில் புகார் செய்தனர். விசாரணையில், போலி ஆவணம் மூலம், ராஜேந்திரன், சேட்டு, ராமன், தங்கராஜ், சுந்தரம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, 80 சென்ட் நிலத்தை அபகரித்து மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மீது, நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராமன், தங்கராஜ், சுந்தரம் ஆகிய மூவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான சேட்டு, ராஜேந்திரன் ஆகிய இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us