/உள்ளூர் செய்திகள்/மதுரை/"மனோரஞ்சனி' ராகத்தால் வசப்படுத்திய ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்"மனோரஞ்சனி' ராகத்தால் வசப்படுத்திய ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்
"மனோரஞ்சனி' ராகத்தால் வசப்படுத்திய ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்
"மனோரஞ்சனி' ராகத்தால் வசப்படுத்திய ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்
"மனோரஞ்சனி' ராகத்தால் வசப்படுத்திய ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள்
ADDED : ஆக 07, 2011 02:50 AM
மதுரை: மதுரையில் ராகப்பிரியா சார்பில் நடக்கும் இசை விழாவில் நேற்று,
ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் 'மனோரஞ்சனி' ராகத்தில், ரசிகர்களின் செவிக்கு இசை
விருந்து படைத்தனர்.இவர்கள், பெற்றோரிடம் இசை பயின்று, இசை மேதை
பி.எஸ்.நாராயணசாமியிடம் திறனை மேம்படுத்திக் கொண்டனர். நேற்று மாலை,
'ஸ்ரீராகம்' எனும்
மங்களமான ராகத்தில் ஆதி தாள வர்ணத்தோடு ரஞ்சனி-காயத்ரி பாடத்துவங்கினர்.
முத்துச்சாமி தீட்சிதரின் 'ப்ருக தம்பிகாயை' என்ற வசந்தா ராகத்திலான
கிருதியை பக்தியோடு பாடினர். தஞ்சை பெரிய கோயில் பற்றிய இப்பாடல்
சிந்தையைத் தூண்டியது.அபூர்வராகமான 'மனோரஞ்சனி'யை காயத்ரி ஆலாபனையாக
துவங்க, அரங்கமே அவர் வசமானது. தியாகராஜரின் 'அடுகாதா நீ பல்க' கீர்த்தனை,
நல்ல தேர்வாகவும், பெரும்பாலும் பாடப்படாத ஒன்றாகவும் இருந்தது. ஸ்வர
பிரயோகங்களில் 'மனோரஞ்சனி' ராகத்தை ரஞ்சனி அழகுபடுத்தினார்.
கல்யாணி
ராகத்தில் கோபாலகிருஷ்ண பாரதியின் 'கண்டேன் கலி தீர்ந்தேன்' என்ற பாடல்
ரூபக தாளம், அனுபல்லவி 'நின்றேன் சன்னிதி' அருகில் 'நிர்மலாம்ருதம்
உண்டேன்' என்ற வரிகளை சகோதரிகள் நிரவல் செய்தபோது, தில்லை சன்னிதியில்
தரிசனம்
கிடைத்தது என்றே கூறலாம். பிரதான ராகமான 'பைரவி'யை ரஞ்சனி தெரிவு செய்து,
அற்புதமாக ஆலாபனை செய்தார். தியாகராஜர் லால்குடி தலத்தில் பாடிய 'லலிதே
ஸ்ரீ ப்ராங்குருத்தே' இக்கீர்த்தனை, அம்பாளின் அழகை, ராக வடிவில் கேட்க
முடிந்தது. ரஞ்சனியும், காயத்ரியும் கற்பனை சுரங்களை நேர்த்தியாக பாடி
ரசிகர்கள் உள்ளத்தை தொட்டனர். தண்டபாணி தேசிகரின் 'என்னை நீ மறவாதே'
-அங்கயற்கண்ணி என்ற அமிர்தவர்ஷிணி ராகப் பாடலை தெளிவான உச்சரிப்பு,
இசைத்திறனுடன் பாடினர். ராகம்-தாளம்- பல்லவி- 'சஹானா' என்ற நளினமான ராகத்தை
ரஞ்சகமாக பாடி உருக வைத்தனர். தானமும் பிரமாதம்.பக்கவாத்திய கலைஞர்கள்
வயலின்- சாருமதி ரகுராம், மிருதங்கம்-மனோஜ்சிவா, கஞ்சிரா-அனிருத்த ஆத்ரோ
பங்களிப்பு அபாரம்.நிறைவு நாளான இன்று மாலை 6 மணிக்கு, நித்யஸ்ரீ மகாதேவன் பாடுகிறார்.