/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி கலெக்டருக்கு எம்.எல்.ஏ., மனுஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி கலெக்டருக்கு எம்.எல்.ஏ., மனு
ஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி கலெக்டருக்கு எம்.எல்.ஏ., மனு
ஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி கலெக்டருக்கு எம்.எல்.ஏ., மனு
ஆதிதிராவிட மாணவிகளுக்கு விடுதி கலெக்டருக்கு எம்.எல்.ஏ., மனு
ADDED : ஆக 05, 2011 03:11 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிட
மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என
எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து முத்துக்குமார்
எம்.எல்.ஏ., கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:விருத்தாசலத்தில் உள்ள
கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 2,700
மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் சுமார் 500 மாணவிகள் ஆதிதிராவிட
வகுப்பை சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு தங்கும் விடுதி இல்லாததால் பல்வேறு
சிரமங்களுக்கு இடையே தினமும் தங்கள் ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர்.
எனவே ஆதிதிராவிட மாணவிகளுக்கு தனி விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும்.அதுபோல் பெரியார் நகர் எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம் உள்ள
நகராட்சி பூங்காவை நகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காததால் சமூக
விரோதிகளின் கூடாரமாக உள்ளது. பூங்காவில் பழுதடைந்த விளையாட்டு சாதனங்களை
சரி செய்தும், இரவு காவலரை நியமித்தும், மின்விளக்குகள் மற்றும் செடிகள்
வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் எம்.எல்.ஏ.,
கூறியுள்ளார்.