ADDED : ஆக 05, 2011 02:34 AM
சென்னை : 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வங்கிகளும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன' என, வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாசலம் கூறியதாவது:நம் நாட்டில், 25 அரசு வங்கிகளும், 26 தனியார் வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. வங்கிகள் தனியார் மயமாக்கல், வங்கிகளை இணைப்பது, வேலைவாய்ப்பு, வாடிக்கையாளர் பிரச்னைகள் போன்றவற்றை வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
வங்கிகளில் ஒரு லட்சத்து 52 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால், அன்னிய முதலீட்டை ஆதரித்து, தனியார் வங்கிகள் மூலமாக ஒப்பந்த பணியாளர்களை அரசு நிர்ணயம் செய்கிறது. வங்கி ஊழியர்களின் நேரடிப் பிரச்னைகளை முன் வைத்து, டில்லியில் தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியது.பேச்சு வார்த்தையில், எந்த பலனும் இல்லாததால் அகில இந்திய அளவில், வங்கிகளின் ஊழியர் சங்கம் போராட்டம் நடத்த உள்ளது. அரசு, தனியார், கூட்டுறவு, அயல்நாட்டு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளுமே இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு வெங்கடாசலம் றினார்.கூட்டத்தில், அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் செயலர்கள் பாஸ்கரன், கிருஷ்ணன், அருணாச்சலம், தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.