ADDED : ஆக 05, 2011 02:33 AM
மதுரை:மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழா நேற்று
நடந்தது.இதில் கலெக்டர் சகாயம் பேசியதாவது: தாய்ப்பால் கொடுப்பது உயிரியல்
நிகழ்வு.
மார்பக புற்றுநோய் உட்பட இதரநோய் வராமல் பாதுகாக்கவும்,
பிரசவத்திற்கு பின் எடை குறைய உதவுவதற்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது
அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மூத்த
குடிமக்கள் சட்டத்தின்படி தாய்மார்களை பராமரிக்காத மகன், மகள், மருமகள்
மீது தண்டனை வழங்க வழி உள்ளது. பெற்றோரை கவனிக்காத மகனுக்கு தண்டனை வழங்க
கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது, என்றார்.சுகாதாரத்துறை இணை இயக்குனர்
சண்முகசுந்தரம், ஊட்டச்சத்து அலுவலர் மங்கையர்க்கரசி, மத்திய அரசு அலுவலர்
மோகன் பங்கேற்றனர்.