ADDED : ஆக 03, 2011 10:36 PM
திருப்பூர் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருப்பூர் கிளை மாநாடு நடந்தது.
கிளைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., செயலாளர் சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். புதிய தலைவராக நாகராஜன், செயலாளராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக ராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், 'இரண்டு ஆண்டுகளுக்கு பணி முடித்த மஸ்தூர் மற்றும் கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை பணியாளர்களை கள உதவியாளர்களாகவும், கணக்கீட்டாளர்களாகவும் பதவி உயர்வு செய்ய வேண்டும்; விழுப்புரம், கடார் மாவட்டங்களில் இருந்து திருப்பூரில் பணியாற்றும் மஸ்தூர் பணியாளர்களை பணி விடுப்பு செய்ய வேண்டும். 'பகுதிநேர பணியாளர்கள் அனைவருக்கும் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், முதல் நிலுவை தொகையுடன் கூடிய சத்துணவு ஊழியர் சம்பளத்தை வழங்க வேண்டும்; மாறுதல் உத்தரவு பெற்று பணி விடுப்பு செய்யாமல் உள்ளவர்களை உடனடியாக பணி விடுப்பு செய்ய வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணை தலைவர் மதுசூதனன், கோவை தெற்கு கிளை செயலாளர் அருள்ராஜ், வடக்கு கிளை செயலாளர் சிவக்குமார், மாநில பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.