/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தரமற்ற எலக்ட்ரானிக் பொருள்ஐந்து கடை மீது வழக்குப்பதிவுதரமற்ற எலக்ட்ரானிக் பொருள்ஐந்து கடை மீது வழக்குப்பதிவு
தரமற்ற எலக்ட்ரானிக் பொருள்ஐந்து கடை மீது வழக்குப்பதிவு
தரமற்ற எலக்ட்ரானிக் பொருள்ஐந்து கடை மீது வழக்குப்பதிவு
தரமற்ற எலக்ட்ரானிக் பொருள்ஐந்து கடை மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 01, 2011 02:42 AM
தாராபுரம்: தாராபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள்
ஆய்வு செய்து தரமற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்த ஐந்து கடைகள்
மீது வழக்கு பதிவு செய்தனர்.தாராபுரம் பொள்ளாச்சி ரோடு, சர்ச் ரோடு, தாலுகா
ஆபீஸ் ரோடு உட்பட பல்வேறு வீதிகளில் எலக்ட்ரானிக் கடைகள் புற்றீசல் போல்
உள்ளது.
பிரபல கம்பெனிகளின் பொருட்களின் விலைக்கு தரமற்ற பொருட்களை
கொடுத்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். பிரபல நிறுவனங்களில் பெயர்களை
ஒட்டிய வேறு பெயரில் சில பொருட்களை தயாரித்தும் விற்பனை
செய்கின்றனர்.தாராபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட தொழில் மைய பொது
மானேஜர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் அதிரடியாக ஐந்து கடைகளில் ஆய்வு
செய்தனர். சோதனையில் தரமற்ற மின்சாதன பொருட்கள் வைத்து விற்பனை செய்ததாக,
மாவட்டம் முழுவதும் 12 கடைகள் கண்டுபிடிக்கப்பட்டது. தரமற்ற பொருட்களை
விற்பனை செய்த கடையின் உரிமையாளர்களிடம் ரூ.50 ஆயிரம் வரை அபாராதமும், ஒரு
ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்தனர். ஐந்து கடைகள்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இச்செய்தி தாராபுரம் முழுவதும் பரவியதால்
சில கடைகளின் உரிமையாளர்கள் கடை அடைத்து சென்றனர்.