/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்
ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல்
கோவில்பட்டி : தமிழக முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய ப்பட்டதை கண்டித்து கோவி ல்பட்டியில் திமுகவினர் சார்பில் மறியல் நடத்தினர்.தமிழக முன்னாள் துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் திமுகவினர் மறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி.சிலம்பரசன், கிழக்கு இன்ஸ்பெக்டர் செல்வம், மேற்கு இன்ஸ்பெக்டர் ஜெயக்கொ டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் லதா, முருகன், நாராயணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 37 பேரை கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். மறியலில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன்,முன்னாள் நகரசெயலாளர் கருணாநிதி, இனாம்மணியாச்சி பஞ்., தலைவர் பச்சமால், திமுக பிரதிநிதி செல்வம், நகர வக்கீல் பிரிவு அமைப்பாளர் அழகுமுருகன், நகர பொருளாளர் அண்ணாத்துரை, 10வது வட்ட செயலாளர் வேலுச்சாமி, 32வது வட்ட செயலாளர் கவுதமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.எட்டயபுரம்:ஸ்டாலின் கைது கண்டித்து திமுக., சார்பில் பஸ்மறியல் போராட்டம் நடந்தது. எட்டயபுரம் பஸ்ஸ்டாண்ட் முன்பு நடந்த பஸ் மறியல் போராட்டத்திற்கு எட்டயபுரம் திமுக நகர செயலாளர் பாரதி கணேசன் தலைமை வகித்தார்.மேலும் அதிமுக அரசை கண்டித்து கோஷங்கள்எழுப்பினர். பே õராட்டத்தில் நகர இளைஞரணி அமைப்பாளர் மணியன், நகர துணை செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய பிரதிநிதி கல்லடிவீரன், நகர பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன்,சுடலைமுத்து சின்னராமசாமி, மகாலிங்கம்,சோலை ஆறுமுகம், முகமதுராஜ்,ரவி, வேலாயுதம் உட்பட 16பேரை எப்போதும் வென்றான் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி, எட்டயபுரம் சப்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)வீரபாண்டி,எட்டயபுரம் சப்இன்ஸ்பெக்டர்கள் சரஸ்வதி, ராஜகுரு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து முத்துச்சாமி தீட்சிதர் மண்டபத்தில் வைத்தனர்.